மேற்கிந்திய தீவுகளை பந்துவீச்சால் குறைந்த ரன்களில் ஆல் அவுட் செய்த இங்கிலாந்து அணி!

உலகக்கோப்பை திருவிழா இங்கிலாந்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இங்கிலாந்தும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 44.4 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுக்களை இழந்தது. இதில் அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் மட்டும் 63 ரன்கள் எடுத்திருந்தார். ஹெட்மார் 39, கெயில் 36 ரன்களும், ரசல் 21 ரன்களும் அடித்து இருந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக மேற்கிந்திய தீவுகள் அணி 212 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணி சார்பாக மார்க் வுட் 6.4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்கள் எடுத்துள்ளார். ரூட் 5 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை எடுத்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.