வரும் 30-ம் தேதி முடிவு.? மருத்துவ குழுவுடன் முதல்வர் நடத்திய ஆலோசனைக்கு பின் தகவல்.!

தமிழகத்தில் பொதுமுடக்கத்தை நீடிப்பது குறித்து வருகின்ற 30 ஆம் தேதி முடிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால் இன்று காலை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் பீலா ராஜேஷ் உட்பட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்தும் ஊரடங்கு நீடிப்பதா ? அல்லது தளர்வு செய்யப்படுவதா? என்று விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பது குறித்து வரும் 30-ம் தேதி முடிவு செய்யப்படும் என மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனைக்கு பின் தகவல் தெரிய வந்துள்ளது. மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக செயற்படுத்த வேண்டிய புதிய உத்திகளை வகுக்க வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்