உபியில் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தர ஆணையம்.!

புலப்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தர ஆணையம் அமைக்க முதல்வர் உத்தரவு.

கொரோனா காரணமாக நான்காவது கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் பொதுமக்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இருந்தாலும், சொந்த ஊர் திரும்ப முடியாமலும் வேலை எதும் இல்லாமலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.இந்த நிலையில் உத்தரபிரதேசம் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு வேலை தர ஆணையம் அமைக்க உத்தரவு விடப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பாக ஆணையம் அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, நாளை முதல் அனைத்து மாநில அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் திறக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்