மேற்கு வங்கத்தில் 108 மாநகராட்சிகளுக்கு பிப்.27-ஆம் தேதி தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

மேற்கு வங்கத்தில் உள்ள 108 மாநகராட்சிகளுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

மேற்கு வங்கத்தில் உள்ள 108 மாநகராட்சிகளுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 108 மாநகராட்சிகளுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 9ம் தேதி கடைசி நாள் என்றும், வேட்புமனுக்களை வாபஸ் பெற பிப்ரவரி 12ம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவித்த தேர்தல் ஆணையம், மார்ச் 8ம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக 48 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், மம்தா பானர்ஜி மீண்டும் கட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக, கட்சியின் பொதுச் செயலர் பார்த்தா சட்டர்ஜி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
Castro Murugan