,

கேரளா: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 90 வயது முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை!!

By

கேரளாவின் பாலக்காடு மாவட்டம் கரிம்பா கிராமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

   
   

2020 ஆம் ஆண்டு தனது அண்டை வீட்டாரான 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 90 வயது முதியவருக்கு விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் சேர்த்து 50,000 ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த உத்தரவை உறுதி செய்த சிறப்பு அரசு வக்கீல் நிஷா விஜயகுமார், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) பிரிவு 7ன் கீழ் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக அந்த நபர் தண்டிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஒன்பது சாட்சிகள் மற்றும் அரசுத் தரப்பால் சமர்ப்பிக்கப்பட்ட பல ஆவணங்களை விசாரித்த பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நீதிமன்றம் கண்டறிந்ததாக எஸ்பிபி கூறினார். போக்சோ சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

 

Dinasuvadu Media @2023