திருவள்ளூரில் சுதாகரன் ,இளவரசி சொத்துக்கள் அரசுடமை

திருவள்ளூரில் இளவரசி ,சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலையான நிலையில், அபாராதத்தொகை 10 கோடி ரூபாய் செலுத்தாததால் சுதாகரன் மட்டும் சிறையில் உள்ளார். இந்நிலையில், 2017-ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் சுதாகரனுக்கு சொந்தமான, சில சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

அந்த இறுதி தீர்ப்பின் அடிப்படையில் இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யட்டப்பட்டு வருகிறது. தமிழக அரசு இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,தஞ்சை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது  திருவள்ளூரில் இளவரசி ,சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.திருவள்ளூரில் இளவரசி ,சுதாகரனுக்கு சொந்தமான 41.22 ஏக்கர் நிலம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.