செர்பியா நாட்டில் பயங்கரம்.! 8 மாணவர்களை சுட்டுக்கொன்ற 7ஆம் வகுப்பு மாணவன்.!

செரிபியா நாட்டில் 7ஆம் வகுப்பு மாணவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 மாணவர்கள் மற்றும் ஒரு பாதுகாவலர் கொல்லப்பட்டனர். 

செர்பியா நாட்டின் தலைநகரான பெல்கிரேடில் நேற்று 7ஆம் வகுப்பு பயிலும் மாணவன் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தான படிக்கும் பள்ளிக்கு சென்றுள்ளான். அங்கு காலை  8.40 மணிக்கு திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கி கொண்டு அங்கு பயிலும் குழந்தைகளை சுட ஆரம்பித்துவிட்டான்.

இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற பாதுகாவலரையும் 7ஆம் வகுப்பு மாணவன் சுட்டு கொன்றுவிட்டான். இதில், 8 மாணவர்களையும் சுட்டு கொன்றுவிட்டான். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் மிகவும் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற்னர்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பள்ளி வளாகத்திற்குள் புகுந்து 7ஆம் வகுப்பு மாணவனை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து பேசிய அந்நாட்டு பிரதமர், இது செரிபியாவின் துயரமான காலம். துப்பாக்கி கலாச்சாரம் பெருகிவிட்டது. தற்போது அந்த மாணவன் வயது 14 ஆகிறது என்பதால் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால், மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்தார்.

இருந்தும், சிறுவர் குற்ற செயலில் ஈடுபட்டால், தண்டிக்கும் வயதை 14 வயதுக்கு மேல் என்பதை மாற்றி 12வயதுக்கு மேல் தவறு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்ட திருத்தும் கொண்டு வரவேண்டும் என்ற குரல்கள் எழ தொடங்கியுள்ளன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.