எகிப்து நாட்டின் உயரிய விருது..! பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவிப்பு..!

பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் உயரிய விருதை வழங்கி அதிபர் எல்-சிசி கௌவுரவித்தார்.

கடந்த ஜனவரி 2023 இல் இந்தியாவின் குடியரசு தின விழாவில் ‘தலைமை விருந்தினராக’ கலந்துகொண்ட எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி அழைத்ததன் பேரில் பிரதமர் மோடி, தனது அமெரிக்க அரசு முறைப்பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக எகிப்து சென்றடைந்தார்.

அங்கு ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிரதமர் மோடி, எகிப்தின் வரலாற்று சிறப்புமிக்க அல்-ஹகிம் மசூதி மற்றும் கெய்ரோவில் உள்ள ஹெலியோபோலிஸ் காமன்வெல்த் போர் கல்லறைக்கு சென்று பார்வையிட்டார். அந்த கல்லறையில் முதல் உலகப் போரில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதன்பிறகு, எகிப்து நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருதை எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கெளரவித்தார். உலகின் பல்வேறு நாடுகள் பிரதமர் மோடிக்கு வழங்கிய 13வது உயரிய அரசு விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.