முட்டை விலை ஒரே நாளில் 15 காசு குறைவு..!!

நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.05 லிருந்து 15 காசுகள் குறைந்து, ரூ.4.90 ஆக நிர்ணயம். 

கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம். முட்டை விலை கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் ரூ.5.05 லிருந்து 15 காசுகள் குறைந்து, ரூ.4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை விற்பனையின் சரிவால் அதிகம் தேக்கம் அடைந்ததே முட்டை விலை குறைய காரணம் என்று கோழி பண்ணையாளர்கள் கூறுகின்றார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.