புரெவி புயல் எதிரொலி: நாளை 6 மாவட்டங்களுக்கு விடுமுறை!

புரெவி புயல் எதிரொலி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை.

வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்று, இலங்கை திரிகோணமலை பகுதியில் நேற்று இரவு கரையை கடந்தது. இதனையடுத்து இன்று இரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன் – குமரி இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புரேவி புயல், தற்பொழுது பாம்பனுக்கு முக அருகில் நிலைக் கொண்டுள்ளதாகவும், இதனால் அடுத்த 3 மணிநேரத்தில் பாம்பனை கடந்து செல்லும். இதன்காரணமாக அப்பகுதியில் 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்பொழுது புயல் கரையை கடக்கவுள்ள நிலையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 6 மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்களை தவிர பிற பணிகளுக்கு வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.