இ – சஞ்சீவனி திட்டம் – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்!

இ – சஞ்சீவனி திட்டத்தின் மூலம் இதுவரை 10 கோடி பேர் பயனடைந்துள்ளதாக பிரதமர் பெருமிதம்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு மாதாந்திர மனதின் குரல் நிகழ்ச்சியான மன் கி பாத்தின் 98வது பதிப்பில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும், இதன் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடுகிறார். இந்த மன் கி பாத் என்கின்ற மனதின் குரலின் முதல் நிகழ்ச்சி 3 அக்டோபர் 2014 அன்று ஒளிபரப்பப்பட்டது.

பிரதமர் மோடி உரை:

maankibaat26

அப்போது பேசிய பிரதமர் மோடி, மன் கி பாத் மக்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான ஊடகமாக மாறியுள்ளது. சுகாதாரத்துறை இ – சஞ்சீவனி திட்டம் டிஜிட்டல் இந்தியாவில் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது. இ – சஞ்சீவனி திட்டத்தின் மூலம் இதுவரை 10 கோடி பேர் பயனடைந்துள்ளனர். ஏழை மக்களுக்கு உயிர்காக்கும் செயலியாக இ – சஞ்சீவனி மாறியுள்ளது.

இ – சஞ்சீவனி செயலி:

esanjeevani

கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், இசஞ்சீவனி செயலி மக்களுக்கு ஒரு பெரிய வரமாக இருந்தது. இ-சஞ்சீவனி செயலியானது மருத்துவர்களுடன் தொலை ஆலோசனையில் உதவுகிறது. இந்த செயலியைப் பயன்படுத்திய மருத்துவர்களையும் மக்களையும் வாழ்த்துகிறேன். தொற்றுநோய் காலத்தில் இது நிறைய உதவியது. இமயமலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் இந்த செயலி ஒரு பயனுள்ள கருவியாக உள்ளது.

டிஜிட்டல் இந்தியா:

digitelindia26

மக்கள் உறுதியாக இருந்தால் இந்தியாவை நிச்சயம் தூய்மைப்படுத்த முடியும். ஒவ்வொரு மக்களும் பிளாஸ்டிக் பைகளை மாற்றி துணி பைகளை பயன்படுத்த வேண்டும். UPI (ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்) அமைப்பு மற்றும் இ-சஞ்சீவனி செயலி ஆகியவை டிஜிட்டல் இந்தியாவின் சக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டு. உலகின் பல நாடுகள் இந்தியாவின் யுபிஐக்கு ஈர்க்கப்படுவதாக கூறினார்.

UPI-Pay இணைப்பு:

upipay26

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே சமீபத்தில் தொடங்கப்பட்ட UPI-Pay இணைப்பு பற்றி அவர் பேசினார். இப்போது, சிங்கப்பூர் மற்றும் இந்திய மக்கள் அந்தந்த நாடுகளில் உள்ளதைப் போலவே தங்கள் மொபைல் போன்களிலிருந்து பணத்தைப் பரிமாற்றுகிறார்கள் என்றார். இந்திய பொம்மைகளுக்கு வெளிநாடுகளிலும் கிராக்கி அதிகமாகிவிட்டதால், தற்போது வெளிநாடுகளிலும் இந்திய பொம்மைகளின் தேவை அதிகரித்து விட்டது எனவும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment