உங்க குழந்தைகளுக்கு பாஸ்தா இப்படி செஞ்சு குடுங்க.. டேஸ்ட்டா இருக்கும்.!

பாஸ்தா– மசாலா பாஸ்தா எப்படி செய்வது என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்:

  • பாஸ்தா =2 கப்
  • வெங்காயம் =1
  • தக்காளி =3
  • குடமிளகாய் =பாதியளவு
  • கேரட் =1
  • பீன்ஸ் =கால் கப்
  • தக்காளி சாஸ் =2 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் =1 ஸ்பூன்
  • மல்லி தூள்= 1/2 ஸ்பூன்
  • கரம் மசாலா =1 ஸ்பூன்
  • எண்ணெய் =5 ஸ்பூன்
  • பச்சைமிளகாய் =2
  • இஞ்சி பூண்டு விழுது =1/2 ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துவிட்டு இரண்டு கப் பாஸ்தா சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்கவும். பிறகு அதை வடிகட்டி விட்டு ,குளிர்ந்த நீரைக் கொண்டு மீண்டும் அதிலே ஊற்றி வடிகட்டவும் .அப்போதுதான் பாஸ்தா குழையாமல் இருக்கும்.

ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்கி சிறிதளவு கேரட் பீன்ஸ், குடைமிளகாய், ஒரு நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பிறகு இரண்டு தக்காளியை அரைத்து ஊற்றி சேர்த்துக் கொள்ளவும், அதிலே மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன், அரை ஸ்பூன் மல்லித்தூள்,1 ஸ்பூன் கரம் மசாலா, தக்காளி சாஸ் இரண்டு ஸ்பூன் சேர்த்து கிளறி அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கி  விடவும்.

பிறகு பாஸ்தாவையும் சேர்த்து கொத்தமல்லி இலைகள், மிளகுத்தூள் கால் ஸ்பூன் , உப்பு ஆகியவற்றையும் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கினால் சுவையான மசாலா பாஸ்தா தயார்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.