ஷ்ராமிக் சிறப்பு ரயில் வேண்டாம்.! மம்தா பானர்ஜி கோரிக்கை .!

புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வரும் ஷ்ராமிக் ரயிலை 26-ம் தேதி வரை இயக்க வேண்டாம் என மம்தா பானர்ஜி  கோரிக்கை வைத்துள்ளார்.

வங்காள விரிகுடா கடலில் உருவான அம்பன் என புயல் கடந்த 20-ம் தேதி மேற்கு வங்கம்,  கடல் பகுதி வழியாக கரையைக் கடந்தது. அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள், பாலங்கள்,  காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. அம்பன் புயலால்  86 பேர் உயிரிழந்துள்ளனர் என மேற்கு வங்க அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்திற்கு பிரதமர் மோடி ரூ.1000 கோடி உடனடி நிவாரணம் அறிவித்தார். அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகளை மாநில அரசு தரப்பில் செய்து வருகிறது.

இந்நிலையில்,  புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வரும் ஷ்ராமிக் ரயில்கள் வந்தால் பல இடையூறுகள் ஏற்படும் என்பதால் மே 26-ம் தேதி வரை ஷ்ராமிக் ரயில் இயக்க வேண்டாம் என அம்மாநில மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

author avatar
Dinasuvadu desk