75 வீட்டுக்கு வாடகை வேண்டாம் – வீட்டு உரிமையாளர்

முதலில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றானது, பல்லாயிரக்கணக்கானோரை பாதித்த நிலையில், அங்கு பலர் உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து, இது பல நாடுகளில் பரவி வருகிறது.  இதனால், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, ஐதராபாத்தில் வசித்து வரும் பாலலிங்கம் என்பவருக்கு சொந்தமாக 3 குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பில், இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 75 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊரடங்கினால் வீட்டில் முடங்கி இருக்கும் இவர்களிடம், வீட்டு உரிமையாளரான பால லிங்கம் இரக்கம் காட்டி வீட்டு வாடகை வேண்டாம் என கூறியுள்ளார். இந்த 3 குடியிருப்புகள் மூலம் அவருக்கு கிடைக்கும் மாத வருமானம் 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், அடுத்த மாதமும் வீட்டு வாடகை வசூலிக்க போவதில்லை என கூறியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.