உங்க மிக்ஸியில் மறந்தும் இந்த பொருட்களை அரைச்சிடாதீங்க..!

Mixer grinder-மிக்ஸியில் எந்த பொருட்களை எல்லாம் அரைப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

மிக்ஸர் கிரைண்டர்:

நவீன இயந்திரங்கள் நம் சமையலறையில் தற்போது முக்கிய இடம் பிடித்துள்ளது .நம் சமையல் வேலைகளை துல்லியமாக முடித்து விடுவதோடுமட்டுமல்லாமல்  நம் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.

அப்படிப்பட்ட பொருள்களை நாம் பாதுகாக்க வைத்துக் கொள்வது அவசியம் தானே.. அந்த வகையில் மிக்ஸி  அடிக்கடி கெட்டுப் போவதற்கு  நாம் செய்யும் தவறுகளை இங்கே பார்ப்போம்.

மிக்ஸியில் நாம் எதை போட்டாலும் அரைத்து விடும் என்று நினைப்பது தவறு. என்னதான் மிக்ஸியில் பிளைடுகள் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் சில பொருட்களை போடுவதை தவிர்க்க வேண்டும்.

காய்கறிகள்:

காய்கறிகளை  மிகத் தடிமனாக போடுவதை தவிர்க்க வேண்டும், மேலும் அதிக நார்கள் உள்ள உணவுப் பொருள்களையும் போடக்கூடாது இது மிக்ஸியின் பிளைடுகளில் மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் மோட்டார் சேதம் அடைய கூட நேரலாம்.

நட்ஸ் வகைகள்:

கடினமான கொட்டை வகைகளை அரைக்கக் கூடாது.இதனால் பிளேடுகளுக்கு இடையில் துகள்கள் சென்று மிக்ஸி அரைக்காது . இவற்றை நன்கு தூளாக்கி பிறகு வேண்டுமானால் அரைத்துக் கொள்ளலாம்.

சூடான பொருள்கள்:

அதிகமாக சூடான பொருள்களை போடுவதை தவிர்க்க வேண்டும், இது பிளண்டர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி இதனால் வெடிப்பு ஏற்படக்கூட வாய்ப்புள்ளது.

கிழங்கு வகைகள்:

கிழங்கு வகைகளை மிக்ஸியில் அரைப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக நாம் அடிக்கடி ஃபேஸ் பேக் போடுவதற்கு  உருளைக்கிழங்கை  அரைத்து  பயன்படுத்துவதுண்டு.

இப்படி உருளைக்கிழங்கில் உள்ள மாவு தன்மை  நீருடன் கலக்கும்போது பசை போலத்தான் அரைக்கப்படும். இது பிளேடுகளில் சேதத்தை ஏற்பட செய்யும்.

ஆகவே இனிமேல் இதுபோல் செய்யாமல் நமக்கு வேலைகளை எளிதாக முடித்துக் கொடுக்கக்கூடிய மிக்ஸி போன்ற இயந்திரங்களை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்வோம்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.