ரஷ்யாவில் நீல நிறத்தில் கும்பலாக சுற்றி திரியும் நாய்கள் – காரணம் இது தானாம்!

ரஷ்யாவில் நாய்கள் சில நீல நிறத்தில் சுற்றி திரிவது போன்ற புகைப்படங்கள் வைரலாகியதை அடுத்து, தொழிலர்ச்சாலைகளில் இருந்து வெளியாகியுள்ள இரசாயனங்கள் தான் இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. 

ரஷ்யாவிலுள்ள நிஷ்னி நோவ்கோரோட் மாகாணத்தில் உள்ள நாய்கள் கும்பல் கும்பலாக நீல நிற ரோமங்களுடன் சுற்றி திரியும் புகைப்படங்கள் இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் இந்த நாய்கள் திடீரென நீல நிறத்தில் மாறுவதற்கான கரணம் என்ன என தெரியாமலேயே இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

பனி நிறைந்த பகுதியான ரஷ்யாவின் நிஷ்னி நோவ்கோரோட் மாகாணத்தின் ஹைட்ரோசியானிக் எனும் அமில தொழிற்ச்சாலைக்கு அருகில் சுற்றி திரிய கூடிய நாய்கள் தான் இந்த நிறத்தில் மாறியுள்ளதாம், ஒருவேளை அந்த இராசயன தொழில்சாலையிலிருந்து வந்த காப்பர் சல்ஃபேட் பட்டு நாய்களின் உரோமங்கள் இவ்வாறு நீல நிறத்தில் மாறியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

author avatar
Rebekal