கொரோனாவால் ட்ரோன் மூலம் வாக்கிங் சென்ற நாய்.!

ஐரோப்பிய நாடான சைப்ரசில் 75 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரவியுள்ள கொரோனாவை கட்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக அந்நாட்டு அரசு பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அந்த வகையில் விமான சேவை ரத்து,போக்குவரத்து தடை, பொதுமக்கள் வெளியே வருவதற்குத் தடை போன்ற கட்டுபாடுகள் நடைமுறையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் வீட்டிலேயே கட்டிப்போடு வளர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது,இதற்கு தீர்வு காணும் விதமாக லிமாசோல் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நாயை நடைபயிற்சிக்கு அழைத்து செல்வதாக ஆளில்லா குட்டி விமானத்தை பயன்படுத்தி நாயின் கழுத்தில் கட்டப்பட்ட கயிற்றை ஆளில்லா குட்டி விமானத்துடன் இணைத்து தனது வீட்டில் இருந்தபடியே அதனை  இயக்குகிறார் .இதனால் அந்த நாய் ஆள் இல்லா சாலையில் ஜாலியாக உலா வருகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.