தேனுடன் இதை கலந்து சாப்பிட்டாலே இதய நோய், கொலஸ்ட்ரால் பாதிப்பு ஏற்படாதா?

தற்காலத்தில் அனைவரும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களில் ஒன்று தேன். இதனை ஆயுர்வேத மருந்துடன் பலர் கலந்து உட்கொள்வர். தேனில் அதிக மருத்துவ குணங்கள் மட்டுமல்லாது நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது. இதனால் இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வீட்டு சமையல் பொருட்களில் ஒன்றான இலவங்க பட்டை பல்வேறு நன்மைகள் தரவல்லது. நாம் பயன்படுத்த வேண்டிய பொருட்கள் வடிகட்டப்படாத தேன், சிலோன் இலவங்க பட்டை.

இதய நோய் பாதிப்பு வராமல் இருக்க: தண்ணீரில் 1 டீஸ்பூன் பட்டை பொடியுடன், 2 டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வரலாம். சளி, இருமல், மூட்டு வலி போன்றவற்றிற்கும் இது நன்மை அளிக்கும்.

கொலஸ்ட்ரால் பாதிப்பிலிருந்து விடுபட: தண்ணீரில் 2 டீஸ்பூன் தேனும், 3 டீஸ்பூன் பட்டை பொடியுடன் கலந்து குடிக்க வேண்டும்.

இலவங்கப்பட்டை, தேன் இரண்டும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை, பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. மேலும், இந்த முறைகளை கையாளுவதற்கு முன்னர் அருகில் உள்ள மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெற்று கொண்டு பயன்படுத்துங்கள்.