நீங்கள் தெளிவான மனநிலையை பெற வேண்டுமா…? அப்ப கண்டிப்பாக இந்த பழக்கங்களை மாற்ற வேண்டும்…!

இன்றைய நாகரிகமான வாழ்க்கையில் மன அழுத்தம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் காணப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த மன அழுத்தமானது சில நேரங்களில் நமது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது. நம் வாழ்க்கையில் இருந்து மன அழுத்தத்தை அகற்ற முடியாது. ஆனால் அதை நிர்வகிக்கவும், அதன் செயல் திறனை குறைக்கவும் முடியும்.

சில நேரங்களில் இந்த மன அழுத்தத்தை குறைக்க நம்முடைய வாழ்க்கையில் சில பழக்கவழக்கங்களை குறைப்பதால் மன அழுத்தத்தை மாற்றமுடியும். மன அழுத்தம் காரணமாக நமது மூளையில் பல்வேறு தாக்கங்கள் ஏற்படுவதுடன், நமது நடைமுறைகளும் மாறுகிறது. எனவே நம்முடைய அன்றாட பழக்க வழக்கங்களில் சிலவற்றை மாற்றுவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ளலாம் இதன்மூலம் நமது மனநிலையும் சீர்படும்.

வேலை இல்லாத சமயங்களில் சுறுசுறுப்பு

வேலை இல்லாத சமயங்களில் நாம் அனைவரும் சோம்பலாக உணர்வதுண்டு. ஆனால் அப்படி சமயங்களில் சோம்பலாக காணப்படாமல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம். இதற்காக நீங்கள் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சிகளை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் விரும்பினால் உங்கள் வீட்டிலேயே உட்கார்ந்து யோகா போன்ற பயிற்சிகளை செய்வதால், உங்கள் மனதை சிறப்பாக வைத்திருக்க முடியும். மேலும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது ஒரு சிறந்த விசயமாகும்.

தண்ணீர் குடித்தல்

மக்கள் வேலை, வேலை என்று  அலைந்து சாப்பிடுவதற்கும் நீர் அருந்துவதற்கு நேரத்தை செலவிடுவதில்லை. மக்கள் வேலையை பிஸியாக இருப்பதால் தண்ணீர் குடிப்பதை நினைத்துக்கூட பார்ப்பதில்லை. ஆனால் இந்த பழக்கம் கூட நமது மனநிலையில் சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

இனிப்புகள்

dark chocolateசிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே இனிப்புகள் என்றாலே பிடித்தமான ஒன்று தான். ஆனால், அதிகமாக இனிப்பு சாப்பிடும் பழக்கம் நமது மூளையில் சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாகவும் நமக்கு மன அழுத்தம் ஏற்படலாம். இனிப்பு வகைகளை சாப்பிடுவதற்கு பதிலாக உங்கள் மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நல்லது.

மொபைல் பயன்பாடு

இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் மொபைல் தவழ்கிறது. மொபைலில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு மூளை செல்களை சேதப்படுத்தும். இதன் காரணமாக தூக்கமின்மை, நாள் முழுவதும் சோம்பல், தலைவலி மற்றும் மன அழுத்தம் போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இந்த சூழலில் மொபைல் பயன்பாட்டை குறைப்பது மிகவும் சிறந்தது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.