தளபதி 65 விஜய்க்கு ஜோடியாக யார் தெரியுமா..?

இதற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. நடிகர்

By bala | Published: Jun 06, 2020 01:40 PM

இதற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

நடிகர் விஜய் அவர்கள் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்று சாதனையும் படைத்தது. தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் விஜய்யின் 65வது படத்தை இயக்க போவது யாரு என்ற சர்ச்சை நிலவி வந்த நிலையில், இயக்குநர் முருகதாஸ் தான் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாகவும் தகவல் வெளியானது.மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி துப்பாக்கி படத்தின் முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வால் தான் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவிருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்பொழுது விஜயின் 65வது படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கவில்லையாம் பிரபல நடிகையான மடோனா செபாஸ்டியன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இதற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc