38 C
Chennai
Sunday, June 4, 2023

Spam call தொல்லை: அதிரடி காட்டிய TRAI…2 மாதத்தில் வருகிறது ‘DCA’ டிஜிட்டல் தளம்.!

ஸ்பேம் கால் மற்றும் தொல்லை தரும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக,...

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்.!!

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில்...

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்களை அடித்தவர் யார் தெரியுமா.? லிஸ்டில் இணைந்த ஆண்ட்ரே ரஸ்ஸல்.!!

டி20 கிரிக்கெட் போட்டிகள் என்றால் போட்டி நடைபெறும் மைதானங்களில் சிக்ஸர் மழைகள் தான் பொழியும் என்றே கூறலாம். அதிலும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், ஐபிஎல் போட்டிக்களில் பல  சிக்ஸர்களை வீரர்கள் விளாசுவார்கள். அப்படி இதுவரை டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்களை அடித்தவர்களின் பட்டியலில் ஆண்ட்ரே ரஸ்ஸல் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

நேற்று (வியாழன்)  அன்று நடைபெற்ற ஐபிஎல் 2023 போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக இரண்டு சிக்ஸர்களை அடித்ததன் மூலம், ஆண்ட்ரே ரஸ்ஸல் தனது சிக்ஸர்களின் எண்ணிக்கையை 600 ஆக உயர்த்தி, டி-20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக  சிக்ஸர்களை அடித்த மூன்றாவது வீரர் ஆனார்.

டி 20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 1,056 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெய்ல் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில  812 சிக்ஸர்களுடன் கீரன் பொல்லார்ட்  உள்ளார். அவரை தொடர்ந்து 600 சிக்ஸர்களுடன் ஆண்ட்ரே ரஸ்ஸல்  மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.