மாநாடு திரைப்படத்தின் டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா..??

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஜூலை 26 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில்  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

நேற்றுடன் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது மாநாடு படத்தின் ட்ரைலர் வெளியாகும் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மாநாடு படத்தின் டிரைலர் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.