வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறுகிறது தெரியுமா.?

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான பாடல்கள், டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம்.

VenthuThaninthathuKaadu

இந்த நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, செப்டம்பர் முதல் வாரத்தில் பிரமாண்டமாக பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் கல்லூரியில் நடைபெறவுள்ளதாம். படம் பாதி மும்பையில் எடுக்கப்பட்டதால், அதே போலவே இசை வெளியீட்டு விழாவிற்கும் செட் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அழைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் சிம்பு வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment