நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா..?

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு “வலிமை” திரைப்படம்  திரைக்கு வர உள்ளது என கூறப்படுகிறது.   இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர், சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்நிலையில், இப்படம் வரும் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.