பொன்னியின் செல்வன்-2 படத்தை நடிகர் கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்கள்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். ரசிகர்களை போலவே சினிமா பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து விட்டு பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில், தற்போது நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இருவரும் படத்தை பார்த்துள்ளார்கள்.
From giving his voice to the #PS world introduction, to watching the movie with #ManiRatnam sir and @ThisIsDSP, our Ulaganayagan has completed a full circle in the #PS Universe!
Thank you @ikamalhaasan sir for all the support from #PS1 to #PS2♥️#PS2RunningSuccessfully… pic.twitter.com/sYHnVKDn58
— Lyca Productions (@LycaProductions) May 2, 2023
படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் பேசியதாவது ” என்னுடைய ஆசை எல்லாம் என்னவென்றால், சினிமாவைப் எல்லாரும் பார்க்க வேண்டும். அது நான் நடித்த படமாக இருந்தாலும் சரி மற்றவர்கள் படமாக இருந்தாலும் சரி. அது நல்ல சினிமாவாக இருக்க வேண்டும். அந்த மாதிரி ஒரு சினிமாவாக அமைந்திருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம்.

இந்த இரண்டு பாகங்களையும் நான் ஒரு படமா தான் நான் இப்போது பார்த்துள்ளேன். ஏனென்றால், ஒன்றாக இரண்டையும் பார்க்கும் போது தான் இது ஒரு முழு காவியமாக தான் நாம் கொள்ள வேண்டும். படத்தை சிறப்பாக மணிரத்னம் எடுத்துள்ளார். இந்தப் படம் தமிழ் சினிமாவின் பெருமை. தமிழரின் பெருமையும் போற்றும் ஒரு இத்தகைய படத்தை எடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு தனி துணிச்சல் வேண்டும்” என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் கருத்து வித்தியாசங்கள், மாற்றுக் கருத்துக்கள் எல்லா படங்களுக்கும் வருவது தான். மாற்று கருத்துக்கள் இருந்தாலும் கூட பொன்னியின் செல்வன் படத்தை மக்கள் ஆதரிக்கிறார்கள் மெத்த மகிழ்ச்சியை எனக்கு அது அளிக்கிறது” என கூறியுள்ளார்.