நானும் சிஎஸ்கே ஆதரவாளன்! ஆனா தமிழன் இல்லாதது வேதனை – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் கூட தகுதியாக கிடைக்கவில்லையா?  என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி 2.0 விளக்க பொதுக்கூட்டம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், நானும் கிரிக்கெட் பார்ப்பேன், எனக்கும் கிரிக்கெட் பிடிக்கும், அதுவும் நானும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆதரவாளன் தான்.

எனக்கும் தோனியை பிடிக்கும், தோனிக்கு விசில் போடு என்று கூறி மேடையில் விசில் அடித்தார். ஆனால், அந்த அணியில் ஒரு தமிழன் கூட இல்லாமல் இருப்பது நிச்சயம் வருத்தம் தான் என தெரிவித்தார். 20 வீரர்கள் இருக்கிறார்கள், அதில் ஒரு தமிழனாவது இருந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எல்லாரும் ஆதரவு தருகிறோம், பேரிலேயே சென்னையை வைத்துக்கொண்டு தமிழக வீரர்கள் இல்லாமல் இருப்பது என்ன நியாயம், வேதனையாகத்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் கூட தகுதியாக உங்களுக்கு கிடைக்கவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையை சார்ந்தவர்கள் கூட சென்னை அணியில் உள்ளனர், ஆனால் தமிழர்கள் இல்லாததுதான் எனக்கு வருத்தமாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்