காளான் பன்னீர் வடை எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா

காளான் பன்னீர் வடையை விரும்பாத குழந்தைகளே இருக்க முடியாது. இது  குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாக இருக்கிறது.

  • காளான் பன்னீர் வடை எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா?

காளான் பன்னீர் வடை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம்.

தேவையான பொருட்கள்

காளான் – 1/2 கப் ( நறுக்கியது)

மிளகாய் பொடி – 1டீஸ்பூன்

கடலை மாவு – 2 டீஸ்பூன்

பன்னீர் – 1/2 கப் (துருவியது)

கறிவேபில்லை –சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

சோம்பு – 1 டீஸ்பூன்

அரிசி மாவு – 2 டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

செய்முறை:

 

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் காளான், சோம்பு, மிளகாய் பொடி, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பன்னீர், கறிவேபில்லை முதலியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து வைத்து கொள்ள வேண்டும். அதற்கு பிறகு  ஒரு பாத்திரத்தை அடுப்பில்  வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து வடைக்கு தட்டுவது போல் தட்டி,  போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூடான சுவையான காளான் பன்னீர் வடை ரெடி.

Leave a Comment