சுவையான சுரைக்காய் கூட்டு செய்வது எப்படி தெரியுமா….?

சுரைக்காய் சிலருக்கு பிடிக்காது, சிலருக்கு பிடிக்கும். ஆனால், சுரைக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இந்த சுரைக்காயில் அட்டகாசமான சுவையுள்ள கூட்டு செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • சுரைக்காய்
  • வத்தல் பொடி
  • தனியா பொடி
  • சீரகப் பொடி
  • மஞ்சள் பொடி
  • உப்பு
  • பொரி கடலை
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கடுகு
  • சின்ன வெங்காயம்

செய்முறை

அரைக்க : முதலில் மிக்ஸி ஜாரில் பொரிகடலை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தாளிக்க : குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் சின்ன வெங்காயம், கருவேப்பிலை, கடுகு சேர்த்து நன்றாக தாளித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துள்ள சுரைக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.

அவிக்க : பின்  உப்பு சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். இறுதியாக குக்கரில் உள்ள சுரைக்காய் நன்றாக வெந்ததும், பொடித்து வைத்துள்ள பொட்டு கடலையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அவ்வளவு தான் அட்டகாசமான சுரைக்காய் கூட்டு தயார்.

சுரைக்காயின் நன்மைகள்

சுரைக்காயில் இரும்புச்சத்து, வைட்டமின் பி, நார்சத்து, தாது உப்புகள் ஆகியவை அடங்கியுள்ளது. இந்த சுரைக்காயை தொடர்ந்து சாப்பிடும் பொழுது கோடை காலத்தில் ஏற்படக்கூடிய தோல் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்குவதற்கும், சிறுநீரகப் பிரச்சினைகள் நீங்கவும் உதவுகிறது. மேலும் பித்த வெடிப்புகள் குணமாகவும் இது உதவுகிறது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், மூலம் சம்பந்தப்பட்ட வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சுரைக்காய் பெரிதும் உதவுகிறது.

author avatar
Rebekal