நவராத்திரி கொண்டாடத்திற்கு உகந்த மிக எளிமையான அவல் பாயாசம் எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா ?

நவராத்திரி கொண்டாடத்தில் அவல் பாயசம் சிறந்த நைவேத்தியமாக இறைவனுக்கு படைக்க படுகிறது.இந்நிலையில் இந்த பதிப்பில் அவல்  பாயசம் எப்படி செய்வது என்பதை பற்றி படித்தறியலாம்.

தேவையான பொருட்கள்:

  • அவல் -1 கப்
  • வெல்லக்கரைசல் -தேவையான அளவு
  • வாழை பழம் -1
  • பேரிச்சம் பழம் -6
  • தேங்காய் பால் – 1 கப்
  • ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
  • உலர்திராட்சை -7
  • நெய் -4 ஸ்பூன்

செய்முறை :

 

 
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி அதில் உலர்திராட்சை , வாழைப்பழ துண்டுகள் , பேரிச்சம் பழம் முதலிய பொருட்களை நெய் சேர்த்து நன்கு வருது எடுத்து வைத்து கொள்ளவும்.
அதற்கு பிறகு அதே பாத்திரத்தில் அவலை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதில்  தேவையான அளவுதண்ணீர் ஊற்றி வேக விடவும்.அதற்கு பிறகு வறுத்து வாய்த்த பொருட்கள் வெல்லக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.