அட்டகாசமான அப்பள குழம்பு எப்படி செய்யணும் தெரியுமா…?

பெண்களுக்கு மூன்று வேலையும் சமயலறையில் நின்று கொண்டு சமைப்பதே மிக பெரிய வேலையாக இருக்கும். அதிலும் தினமும் என்ன குழம்பு வைப்பது என்று யோசித்தே பாதி நாள் ஓடிவிடும். வித்தியாசமாக தினமும் ஏதாவது சமைத்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால், என்ன குழப்பு செய்வது? அப்பளம் என்றாலே பலருக்கும் பிடிக்கும். இதில் குழம்பு செய்து சாப்பிடுவது அட்டகாசமாக இருக்கும். ஆனால், பலருக்கு எப்படி செய்வதென்று தெரியாது. இந்த அப்பளக் குழம்பு எப்படி சுவையாக செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

  • தக்காளி
  • சின்ன வெங்காயம்
  • பூண்டு
  • அப்பளம்
  • எண்ணெய்
  • புளி
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி
  • பெருங்காயத்தூள்
  • கடுகு
  • வெந்தயம்
  • சீரகம்
  • உப்பு
  • மிளகாய்த்தூள்

செய்முறை

முதலில் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும், அப்பளத்தை பொரித்து எடுத்து கொள்ள வேண்டும். பின்பு அதே எண்ணெயில் கடுகு, வெந்தயம் மற்றும் சீரகத்தை சேர்த்து அதனுடன் பெருங்காயம் சிறிய துண்டு சேர்த்து தாளிக்கவும். பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு தேவையான அளவு கறிவேப்பிலை மற்றும் தக்காளி சேர்த்து கொள்ளவும்.

தக்காளி வதங்குவதற்கு உப்பு சேர்த்து, தக்காளி வதங்கியவுடன் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும். அதன் பின் நமக்கு தேவையான அளவு நீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். மிளகாய் தூளின் பச்சை வாசனை நீங்கியதும் எடுத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்க்க வேண்டும். இவை ஒரு முறை கொதித்து வந்ததும் பொரித்து வைத்துள்ள அப்பளத்தை இதனுடன் சேர்க்க வேண்டும். அதன் பின்பதாக உப்பின் அளவை சரி பார்த்து விட்டு ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் அட்டகாசமான அப்பளக் குழம்பு தயார்.

author avatar
Rebekal