ஜகமே தந்திரம் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…??

  • ஜகமே தந்திரம் படத்திற்காக நடிகர் தனுஷ் 15 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். y not studios தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மற்றும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த திரைப்படம் “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த திரைப்படம் 60.கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்காக தனுஷ் 15 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜூன் 18 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள திரைப்படத்தை பார்க்க அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.