அடேங்கப்பா…தொடர் தோல்வி கொடுத்தாலும் கோடிகளில் சாதனை படைத்த பிரபாஸ்.!

Kalki2898AD: நடிகர் பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898-AD” திரைப்படம் ப்ரீ பிசினஸில் ரூ.750 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898-AD” திரைப்படத்தை வைஜெயந்தி மூவீஸ் தயாரித்துள்ளது. சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தின் ப்ரீ பிசினஸ் ரூ.750 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால், நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் ஆதிபர்து மற்றும் சில படங்கள் தோல்வியை தழுவினாலும் இந்த திரைப்படம் எத்தனை கோடிக்கு மீட்கப்பட்டது பெரியதாக பார்க்கப்படுகிறது ஆனால் இந்த திரைப்படப் புகழும் சாதனை படைக்கும் என்று வைத்திருந்தான் பார்க்க வேண்டும்

அதில், இந்தி திரையரங்கு உரிமையை ரூ.100 கோடிக்கு அனில் தடானியின் ஏஏ பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்தி சினிமா ஓடிடி உரிமை ரூ.175 கோடிக்கும், தெற்கு சினிமா ஓடிடி உரிமை ரூ.200 கோடிக்கும், தெலுங்கு மற்றும் பிற மாநில திரையரங்குகள் உரிமை ரூ.300 கோடிக்கும் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நடிகர் பிரபாஸ் இதற்கு முன்னதாக ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்திருந்தார். இப்பொது, கல்கி 2898-AD படத்தின் மூலம் கல்கியாக அவதாரம் எடுத்துக்கிறார். படத்தில் பிரபாஸைத் தவிர, அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் , மற்றும் திஷா பதானி ஆகியோர் நடித்துள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.