ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு எத்தனை கோடி லாபம் தெரியுமா.?

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவிற்கு 35,000 கோடி ரூபாய் வரை சேமிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

தொழில்துறை மதிப்பீடுகளின்படி, பிப்ரவரி முதல் ரஷ்யா, கச்சா எண்ணெயை மலிவாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதன் மூலம் இந்தியா ரூ.35,000 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரியில் ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியது முதல் பல்வேறு நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக திரும்பியதுடன், ஐரோப்பிய சந்தைகள் ரஷ்யாவிற்கு பொருளாதாரத்தடையை விதித்தது. இதனால் ரஷ்யா, தனது விநியோகத்தை ஐரோப்பிய நாடுகளிலிருந்து திரும்பி ஆசிய நாடுகளுக்கு வழங்க தொடங்கியது.

இதன்படி இந்தியா, ரஷ்யாவிடமிருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெயை வாங்குவதால் இந்தியாவிற்கு ரூ.35,000 கோடி சேமிப்பாகிறது, மேலும், இந்தியாவின் பாரம்பரிய விற்பனையாளர்களான சவுதி அரேபியா மற்றும் ஈராக்கை விட கடந்த அக்டோபர் மாதத்தில் ரஷ்யா, இந்தியாவின் முதன்மை விற்பனையாளராக ஆனது.

author avatar
Muthu Kumar

Leave a Comment