Carrot payasam : உங்க வீட்டுல கேரட் இருக்கா..? அப்ப இந்த ரெசிபியை செய்து பாருங்க..!

நம் அனைவரும் வீடுகளில் கேரட்டை வைத்து பலவகையான சமையல்களை செய்வதுண்டு. இதில் வைட்டமின் A, வைட்டமின் K, பொட்டாசியம், மற்றும் நார்ச்சத்து ஆகியவை உள்ளது. கேரட்டில் உள்ள வைட்டமின் A கண் பார்வை, நோய் எதிர்ப்பு சக்தி, மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

கேரட்டை வைத்து சூப், சாலட், மற்றும் ஜூஸ் போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் கேரட் பாயசம் செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை 

  • கேரட் -1 கப்
  • பால் – 1 கப்
  • சர்க்கரை – 1/2 கப்
  • ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
  •  உப்பு – தேவையான அளவு

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கேரட், பால், சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பின் கேரட் வெந்ததும், தண்ணீரை சேர்த்து கிளற வேண்டும். பின் பாயாசம் கெட்டியாகும் வரை கிளற வேண்டும். பாயாசம் கெட்டியான பின் அடுப்பில் இருந்து இறக்கி, ஆற வைக்க வேண்டும். இப்பொது சுவையான கேரட் பாயாசம் தயார்.

குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள். இது சுவையாக இருப்பதுடன், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.