கணவன் மனைவி வாழ்க்கையில் விரிசல் ஏற்படாமல் இருக்க இதை செய்து பாருங்கள் !

கணவன் மனைவி இல்லற வாழ்க்கையில் சிறப்பாக அமைய கணவன் தான் மனைவிடம் சில விஷயங்களில் விட்டு கொடுத்து போக வேண்டும்.மனைவியை சந்தோசப்படுத்தும்  தந்திரத்தை கணவர்  தெரிந்து வைத்து இருக்க வேண்டும். மேலும் கோவத்தை ஏற்படுத்தும் வகையில் யாராவது ஒரு பேசினாலும் ஒரு அமைதியாக போகவேண்டும்.

பொதுவாக ஆண்கள் கோவத்தில் ஆக்ரோஷமாக பேசிவிடுவார்கள்.ஆனால் சிறிது நேரம் கழித்து தான் என்ன பேசினோம் என்பதை மறந்து விடுவார்கள்.ஆனால் பெண்கள் அப்படி இல்லை கணவன் கோவத்தில் பேசியதை நினைத்து கொண்டு அழுது கொண்டு இருப்பாள்.

Image result for கணவன் மனைவி எப்படி இருக்கணும்

அப்போது மனைவியை சமாதானம் படுத்தும் வகையில் கணவன் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.மனைவி அழுது கொண்டு இருந்தாலோ , கண் கலக்கினாலோ யாரு பக்கம் தவறு இருந்தாலும் அதை பெரிது படுத்தாமல் பிரச்சனையை சிறிது நேரத்திலே முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.அதற்காக இருவரும் மன்னிப்பு கேட்கவும் தயங்க கூடாது.

Related image

மனைவியின் உள் உணர்வுகளை கணவன் புரிந்து கொள்ள வேண்டும்.மனைவி சோகமாக இருக்கும் போது மனைவியின் கைகளை பிடித்து கொண்டு ஆறுதலாக பேச வேண்டும்.அது கணவனின் நம்பிக்கையை ஏற்படுத்தும்.காலையில் மனைவி செய்யும் வேளையில் பங்கு போட்டு செய்ய வேண்டும் அது சிறிய வெளியாக இருந்தாலும் ,சரி பெரிய வேலையாக இருந்தாலும் சரி இதனால் நேசத்தை அதிகப்படுத்தும்.

குழந்தைகளை மனைவி பார்த்து கொண்டு வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் மனைவி செய்து கொண்டு இருப்பாள்.அதனால் கணவன் குழந்தை உடன் நேரத்தை செலவு செய்தால்  மனைவி மற்ற வேலைகளை செய்ய உதவியாக இருக்கும். மேலும் வாரத்தில் ஒரு முறை குழந்தைகளையும் ,மனைவியையும் அழைத்து சென்று வந்தால் மனைவிக்கும் நிம்மதியாக இருப்பாள்.

Image result for கணவன் மனைவி எப்படி இருக்கணும்

மனைவி நகைசுவை உடன் பேசுபவராக இருந்தால் அவரின் பேச்சை காது கொடுத்து கேட்கவேண்டும்.வெளியில் மனைவியை அழைத்து சென்று இருக்கும் போது மற்ற தம்பதியிடம் மத்தியில் தனக்கு எப்படி மரியாதை கொடுக்கிறார் என்பதை பார்ப்பார்கள் அதற்க்கு ஏற்ப மனைவிக்கு மரியாதை கொடுத்து பேசவேண்டும். இவை அனைத்தையும் கடைபிடித்து செய்து வந்தால் கணவன் மனைவிக்குள் விரிசல் ஏற்படாது.

 

 

 

author avatar
murugan