ஓமைக்ரானை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள் – WHO

ஓமைக்ரான் பாதிப்பு கடுமையானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் லேசானதாக இல்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் ஆனது அனைத்து நாடுகளிலும் தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதனையடுத்து ஒவ்வொரு நாடுகளும் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவைப் பொருத்தவரையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீப நாட்களாக உச்சத்தில் காணப்படுகிறது. இதனால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓமைக்ரான் வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், ஓமைக்ரானை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.  இது உயிரிழப்பை ஏற்படுத்துவதால், மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஓமைக்ரான் பாதிப்பு கடுமையானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் லேசானதாக இல்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.