‘வரதட்சணை வேண்டாம்’ – பெண் வீட்டாரிடம் நகைகளை ஒப்படைத்த மணமகன்…!

கேரளாவில் சதீஷ் என்பவர், அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணான ஸ்ருதிக்கு அவரது பெற்றோர் கொடுத்த வரதட்சணையை அவர்களிடமே திருப்பி கொடுத்துள்ளார். 

இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்றாலே வரதட்சணை தான் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. வரதட்சணை கொடுத்து பெண்களை கட்டி கொடுப்பதில்லாமல், சில சமயங்களில் இந்த வரதட்சணையே அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு காரணமாக அமைகிறது.

இன்றைய சமூகத்தில் வரதட்சணை இல்லாத திருமணத்தை பார்ப்பதே அரிதாக இருக்கும் சூழலில் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த நாதஸ்வர இசைக்கலைஞர் சதீஷ் தனது திருமண நிச்சயத்தின் போது வரதட்சணை வேண்டாம் என பெண் வீட்டாரிடம் கூறியிருந்தார்.

ஆனால், மணமகள் ஸ்ருதி தனது பெற்றோர் கொடுத்த 50 சவரன் தங்க நகைகளை அணிந்தபடி மணமேடையில் ஏறினார். இதனையடுத்து, தனது கொள்கையே வரதட்சணை வாங்கக்கூடாது என்பது தான் என்று கூறி திருமணம் முடிந்ததும், ஸ்ருதி அணிந்திருந்த நகைகளை, சதீஷ் மணமகளின் பெற்றோரிடம் ஒப்படைத்தார். சதீஷின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.