“அரசு ரத்த வங்கி குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்பவேண்டாம்" எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குனர் அறிவுறுத்தல்…!!

அரசின் ரத்த வங்கிகள் குறித்த வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம் என்று  எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குனர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு HIV வைரஸ் ரத்தம் செலுத்திய விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது .தற்போது அந்த பெண்மணி மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதையடுத்து , எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குனர் செந்தில் ராஜ், மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு , ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அதையடுத்து ஹெச்ஐவி ரத்தம் வழங்கிய இளைஞரையும் அவர் சந்தித்து பேசிய அவர் செய்தியாளர்களிடம் இது குறித்து கூறும் போது , தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். அந்த பெண்ணின் கருவில் உள்ள குழந்தைக்கு ஹெச்ஐவி பரவாத வகையில் உரிய சிகிச்சை வழங்கப்படுவதாக தெரிவித்த எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குனர் செந்தில் ராஜ் அரசு ரத்த வங்கிகள் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை , வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment