மதுவிலக்கு விவாகாரத்தில், தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடப்படும் என்று சொல்லவே இல்லை… அமைச்சர் பேச்சு…

திமுக சட்டமன்ற உறுப்பினர் கன்னியாகுமரி ஆஸ்டின் சட்டசபையில்,  2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் படிப்படியாக தமிழகத்தில் மதுபான கடைகள் மூடப்படும் என்று மக்களிடம் சொல்லிதான் தமிழக்கத்தில் ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால் 4 ஆண்டு முடிந்து விட்டது. இன்னும் ஒரு ஆண்டில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு விடுமா? என கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி,  தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்றுதான் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. 5 ஆண்டுகளில் அனைத்து கடைகளும் மூடப்படும் என்று எங்கேயும் நாங்கள் சொல்லவில்லை. திடீரென அனைத்து மதுபான கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உள்ளே வந்துவிடும். எனறார். அப்போது குறுக்கிட்ட தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்கள்,  தேர்தல் வாக்குறுதி கொடுக்கின்றபோது படிப்படியாக தான் எல்லாமே செய்ய முடியும். குறிப்பிட்ட காலத்திலேயே எல்லாவற்றையும் செய்திட முடியாது. கள்ளச்சாராயம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், அரசு கவனமாக இருந்து அதை பின்பற்றி படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்படும் என்றார்.

author avatar
Kaliraj