விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் 6-வது முறையாக சாம்பியன்.!

விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் இறுதிப்போட்டியில் இத்தாலியின் பெரெட்டினியுடன் நேற்று மோதினார்.  முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் பெரெட்டினி கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்ததாக ஜோகோவிச் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 செட்களையும் 6-4 , 6-4 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

3 மணிநேரம் 24 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பெரிட்டினியை 6-7, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி கோப்பையை ஜோக்கோவிச் வென்றார். இந்த வெற்றியின் மூலம் தனது 20வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய அவர் பெடரர் நடாலின் சாதனையை சமன் செய்து முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.