தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிரான்ஸ் வீரர் – ரிங்கை விட்டு வெளியேற மறுத்து போராட்டம்…!

தலையில் தாக்க கூடாது என நடுவர்கள் எச்சரித்தும் கேட்காததால், பிரான்ஸ் குத்துச்சண்டை வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான குத்துச்சண்டையில் சூப்பர் வெவி வெயிட் பிரிவுக்கான காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பிரேசர் கிளார்க் மற்றும் பிரான்சை சேர்ந்த மௌராட் ஆலிவ் ஆகியோருக்கு பலப்பரீட்சை நடந்துள்ளது.  முதல் சுற்றிலேயே பிரான்ஸ் வீரர் இங்கிலாந்து வீரரை  ஆக்ரோஷமாக தலையில் குறிவைத்து தாக்கியதால் இங்கிலாந்து வீரர்  நிலை குலைந்துள்ளார்.

முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் நடுவர்களிடமிருந்து 10-9, 10-9, 10-9, 9-10, 9-10 புள்ளிகளை பெற்றுள்ளார். இதன் பின் எதிர் வீரரை தலையில் தக்க கூடாது என நடுவர்கள் எச்சரித்துள்ளனர். இதனை அடுத்து 2-வது சுற்றிலும் அதேபோல் இங்கிலாந்து வீரரை பிரான்ஸ் வீரர் தலையில் தாக்கியுள்ளார். எனவே, இரண்டாவது சுற்று ஆட்டம் 2.56 நிமிடத்திலேயே நிறுத்தப்பட்டு, பிரான்ஸ் வீரர் ஆலிவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து வீரர் கிளார்க் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரான்ஸ் வீரர் ஆலிவ், ரிங்கை விட்டு வெளியேறாமல் அந்த இடத்திலேயே அமர்ந்து அரை மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இருந்தாலும் இறுதியாக தனது தோல்வியை ஒப்பு கொண்டு அவர் வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

author avatar
Rebekal