நாகையில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி ரேஸ் நடத்த அனுமதி மறுப்பு…!!!

நாகையில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி ரேஸ் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம்  தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் ஜன.17ம் தேதி மாட்டு வண்டி, குதிரை வண்டி ரேஸ் நடத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி அனுமதியின்றி பந்தயம் நடத்தி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் தேன்மொழி கூறியுள்ளார்.