ரொம்ப கஷ்டமான விஷயம்! அதிர்ச்சியுடன் ‘GOAT’ படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு!

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து தி கோட் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படப்பிடிப்பில் இருந்து நடிகர் வைபவ் உடன் இயக்குனர் வெங்கட் பிரபு அதிர்ச்சியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ” தமிழ் சினிமாவில் ரொம்ப கஷ்டமான விஷயம் ஒன்று நடந்து இருக்கிறது. அது என்னவென்றால், நான் அறிமுகம் செய்த ஒரு ஹீரோ 25 படங்களில் ஹீரோவாக நடித்து விட்டார் என்பது தான். எனக்கு தோணுவது என்னவென்றால் நமக்கு அவ்வளவு வயதாகி விட்டதோ என்று தான். அதற்குள் எப்படி இவன் 25 படம் செய்தான் என்று தான் தோணுகிறது.

read more- தி கோட் ரிலீஸ் தேதியில் மாற்றம்! காத்திருக்கும் பெரிய சிக்கல்?

இந்த விஷயத்தை நான் அவனிடமே கேட்கப்போகிறேன். அதற்காக தான் நான் இந்த வீடியோவை வெளியீட்டு இருக்கிறேன். வைபவ் தற்போது ரணம் படத்தில் நடித்திருக்கிறார். இது அவருடைய 25-வது திரைப்படம் என்று கூறுகிறார். அதற்குள் எப்படி 25 படம் என்று வைபவிடம் வெங்கட் பிரபு கேட்டார். அதற்கு வைபவ் ” சரோஜா படத்தில் நீங்க அறிமுகம் செய்தீர்கள் படி படியாக நடித்து வளர்ந்துவிட்டேன்” என்று கூறினார்.

பிறகு வெங்கட் பிரபு “ரணம் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வருகிறது. காலையில் இருந்து நான் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்” என்று கூறிவிட்டு இது வெறும் நகைச்சுவை தான் உண்மையில் அவன் 25 படம் நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது கோட் படத்திலும் நடித்து வருகிறார்.

read more – பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு வந்த கனவு! ரொம்ப பெருசா இருக்கே! 

என்னுடைய சார்பாக ரணம் படம் பெரிய வெற்றியை பெறவேண்டும். கண்டிப்பாக ரணம் படத்தை பாருங்கள். உங்களுடைய இந்த 25-வது படம் வெற்றிபெற படக்குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் ” என்று கூறியுள்ளார். வாழ்த்து தெரிவிப்பதற்கே சீரியஸாக பேசுவது போல வெங்கட் பிரபு வெளியீட்டு இருக்கும் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment