9வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகும் டீசல் விலை.!வரும் தினங்களில் விலை உயர வாய்ப்பு.!

இந்தியாவில் கடந்த 9 தினங்களாக டெல்லி, மும்பை,சென்னை மற்றும் கொல்கத்தாவில் டீசல் விலை எந்த வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

உலகளவில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள்(OMC ) நிர்ணயிக்கிறது. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 40 நாட்களாக அதாவது ஜூன் 29 முதல் பெட்ரோல் விலை மாறாமல் சென்னையில் லிட்டருக்கு ரூ.83.63க்கும் , டெல்லியில் ரூ.80.43க்கும் , மும்பையில் ரூ.87.19க்கும் மற்றும் கொல்கத்தாவில் ரூ.82.05க்கும் விற்பனையாகிறது.

மேலும் டீசல் விலையும் தொடர்ந்து 9 நாட்களாக டெல்லி , மும்பை மற்றும் சென்னையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது டெல்லியில் லிட்டருக்கு ரூ.73.56 க்கும் , மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவில் லிட்டருக்கு ரூ‌80.11,ரூ.78.86 மற்றும் ரூ‌77.06 ஆக உள்ளது.

இந்த நிலையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக வரும் தினங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர கூடும் என்று கூறப்படுகிறது.