சன் பிக்கர்ஸ் படத்திற்காக கதை, திரைக்கதை, வசனம் எழுதவுள்ள தனுஷ்!

  • தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து கார்த்திக் சுப்புராஜ் படம், மாரி செல்வராஜ் படம், ராம் குமார் படம் என பிசியாகி வருகிறார். 
  • இதில் தனது 44வது படத்தினை சன் பிக்ச்சர்ஸ் தயரிப்பில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுத உள்ளார். 

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக பட்டாஸ் திரைப்படம் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம், ராம் குமார் இயக்கும் ஒரு படம் என பிசியாக நடிக்க உள்ளார்.

இதில், தனுஷ் நடிக்கும் 44வது திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது என சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தது. ஆனால் யார் அப்படத்தின் இயக்குனர் என அறிவிக்காமல் இருந்து வந்தது.

இதற்கிடையில் அப்படத்தை தனுஷ் தான் இயக்குகிறார் என கூறப்பட்டது. ஆனால், தற்போது வந்த தகவலின் படி, இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகியவை தனுஷ் எழுத, மித்ரன் ஜவஹர் இப்படத்தை இயக்க உள்ளார் என தற்போது தகவல்  வெளியாகியுள்ளது. தனுஷ் நடித்த குட்டி, யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை மித்ரன் ஜவஹர் தான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.