வரும் 10-ம் தேதி முதல் குருவாயூர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி.!

கேரளாவில் புகழ் பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு  வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். ஆனால், கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த 5 மாதங்களாக தரிசனம் செய்ய  பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், தற்போது மத்திய அரசு ஊரடங்கு தளர்வுகள் அறிவித்துள்ளதால், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில்,   தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிப்பது குறித்து குருவாயூர் தேவசம் தலைவர் கே.பி.மோகன்தாஸ் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய கே.பி.மோகன்தாஸ் வருகின்ற 10-ம் தேதி முதல் தரிசனம் செய்ய தினமும் 1000 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள்  சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முககவசம் அணிந்து வரவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கோவிலுக்கு வருவதற்கு முன் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan