காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பில்லை – இந்திய வானிலை ஆய்வு மையம்!

இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், வங்கக்கடலில் அவ்வப்போது காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகி வருகிறது. இந்நிலையில் இன்று 12 மணி நேரத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இன்று வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் தற்பொழுது இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாவிட்டாலும், முன்பு கூறியபடி நாளை முதல் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் எனவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
Rebekal