புனேவில் அதிகரித்து வரும் டெங்கு !

கடந்த இரண்டு வாரங்களில், புனேவில் டெங்கு காய்ச்சலில் 50 பேருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, ஜனவரி முதல் புனே மாநகராட்சியின் சுகாதாரத் துறையால் 200  பேருக்கு டெங்கு மற்றும் 72 பேருக்கு சிக்குன்குனியா இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளன.

பருவநிலை மாற்றத்தால், காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட நோய்கள், நகரம் முழுவதும் பரவி வருகின்றன. டெங்குவால் இதுவரையில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

ஜனவரி முதல் ஜூலை வரை நடந்த ஆய்வக சோதனைகள் 193 நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில், 11 நபர்களுக்கு  H1N1 வைரஸ் (பன்றிக்காய்ச்சல்) தொற்று  உறுதி  செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக, ஒருவரை ஏடிஸ் கொசுக்கள் கடிக்கும் போது, அவரது ரத்தத்தில் தொற்று பரவி டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. டெங்கு ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடியாகப் பரவுவதில்லை. அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, மூட்டு வலி, தசைவலி ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

சிலர் டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர், இதற்கு மருத்துவரின் முறையான சிகிச்சை தேவைப்படுகிறது. இது பசியின்மை, தொடர்ந்து வாந்தி, அதிக காய்ச்சல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் வயிற்று வலி போன்றவற்றுக்கும் வழிவகுக்கும்.

டெங்குவுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை என்றாலும், வைரஸ் காரணமாக ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டால், அவர்களுக்கு நரம்பு வழி திரவங்கள் மற்றும் ஆக்ஸிஜன் சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment