#DelhiElectionResults: 46 தொகுதிகளில் வெற்றி அறிவிப்பு.! தட்டி தூக்கிய ஆம் ஆத்மி.!

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க 36 இடங்கள் போதும் என்ற நிலையில், தற்போது நிலவரப்படி 70 தொகுதிகளில் 41 தொகுதிகளில் அதிகாரபூர்வமாக ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது. மொத்தம் 70 தொகுதிகளில் 46 தொகுதிகளுக்கு அதிகாரபூர்வமாக தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி தொகுதியில் 21,650 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதுபோன்று துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, டெல்லி பட்பர்கஞ்ச் தொகுதியில் 3,391 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி பெருபான்மையை நிரூபித்து 3-வது முறையாக ஆட்சி அமைகிறது. மேலும் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதில் 3-வது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்கள் இடையே உரையாற்றி டெல்லி மக்களுக்கு நன்றி என தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்