டெல்லி பெண் உயிரிழந்த வழக்கு.. 11 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்..!

டெல்லியில் காருக்கு அடியில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பெண்ணின் வழக்கில் 11 டெல்லி போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தன்று அதிகாலை டெல்லியில் இளம் பெண் மீது கார் மோதிய விபத்தில் காருக்கு கீழே அந்த பெண் சில கிமீ தூரம் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காரில் இருந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து இது தொடர்பான வழக்கில் சம்பவம் நடந்த நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 11 போலீசாரை டெல்லி காவல்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது.

சிறப்பு ஆணையர் ஷாலினி சிங் தலைமையிலான விசாரணைக் குழு சமர்ப்பித்த விபத்து தொடர்பான அறிக்கையைத் தொடர்ந்து, அந்த நேரத்தில் ரோந்து பணியில் இருந்த அனைத்து போலீசாரையும் இடைநீக்கம் செய்யுமாறு உள்துறை அமைச்சகம் (MHA) டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன் படி அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குற்றவாளிகளுக்கு எதிராக விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், அவர்கள் தண்டிக்கப்படுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் டெல்லி காவல்துறைக்கு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment